‘திருமணத்திற்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில்’.. ஒரே காரில் பயணித்த ‘8 இளைஞர்களுக்கு’.. ‘கண் இமைக்கும் நேரத்தில்’ நடந்த பயங்கரம்..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Nov 20, 2019 07:55 PM

நண்பருடைய திருமணத்திற்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 8 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

Assam 8 Died In Car Lorry Accident While Returning From Marriage

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 8 இளைஞர்கள் டேஸ்பூர் பகுதியில் நடைபெற்ற நண்பர் ஒருவருடைய திருமணத்திற்கு சென்றுவிட்டு காரில் திரும்பிக்கொண்டிருந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் போய்க்கொண்டிருந்தபோது திடீரென சாலையோரம் நின்றுகொண்டிருந்த சரக்கு லாரி மீது வேகமாகச் சென்ற அவர்களுடைய கார் மோதியுள்ளது.

இந்த பயங்கர விபத்தில் காரில் பயணித்த 8 இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அவர்களுடைய உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #ACCIDENT #ASSAM #CAR #LORRY #FRIENDS #MARRIAGE #DEAD