'இனி இதுக்கெல்லாம் கூப்டாம இருந்து பாருங்க!'.. 'அடி, உதைதான் விழும்!'.. மிரட்டிய சபாநாயகர்.. அரண்டுபோன அதிகாரிகள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Nov 29, 2019 01:54 PM
அரசு பொது நிகழ்ச்சிகளுக்கு முறைப்படி தன்னை அழைக்க வேண்டும், என்று ஆந்திர அரசின் சபாநாயகர் தம்மினேனி சீதாராம் அதிகாரிகளை மிரட்டியுள்ளார்.

ஆந்திர அரசின் சார்பில், ஸ்ரீகாகுளம் நகரில் நடைபெற்ற சமூக சீர்திருத்தவாதி மகாத்மா ஜோதிபா புலேவின் 129-ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வு பற்றிய தகவலை, உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சபாநாயகரான தம்மிமேனி சீதாராமுக்கு தெரிவித்து அழைப்பு விடுக்கவில்லை என தெரிகிறது.
ஆனாலும், முதலமைச்சர் அலுவலகத்தின் மூலமாக வந்த அழைப்பிதழை ஏற்று, அதன் பொருட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ளார் தம்மிமேனி சீதாராம். ஆனால் வந்த இடத்தில் பிற அதிகாரிகளை சந்தித்த தம்மிமேனி, தனக்கு அழைப்பு விடுக்காததற்காக அனைவரையும் திட்டி கிழித்து விட்டார்.
மேலும் இனி தன்னை அரசின் பொது நிகழ்ச்சிகளுக்கு முறையாக அழைக்காவிட்டால் அடி, உதைதான் விழும் என்று தடித்த வார்த்தைகளால் நேரடியாகவே கூறியுள்ள சம்பவத்தை அடுத்து, அதிகாரிகள் உறைந்துபோயுள்ளனர்.
