‘திருமணத்திற்கு முன்’ எல்லா ஆண்களுமே ‘சிங்கங்கள்’ தான்.. ‘மகிழ்ச்சியின் ரகசியத்தை சொன்ன தோனி’..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Nov 27, 2019 12:40 PM

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திருமணம் குறித்து தோனி பேசும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Video All Men Are Like Lions Before Marriage Says MS Dhoni

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தான் ஒரு சிறந்த கணவரை விட சிறந்தவர் எனக் கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு திருமணம் குறித்து பேசிய தோனியின் பேச்சு பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நிகழ்ச்சியில் திருமணம் குறித்துப் பேசிய தோனி, “திருமணத்திற்கு முன் எல்லா ஆண்களுமே சிங்கங்களைப் போன்றவர்கள் தான். நீங்கள் 55 வயதைத் தாண்டும்போதுதான் திருமணத்தின் உண்மையான சாராம்சத்தை பெறுவீர்கள். நான் என் மனைவி விரும்பும் அனைத்தையும் செய்ய அனுமதிக்கிறேன். ஏனென்றால் அவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவர் மகிழ்ச்சியாக இருந்தால்தான் நான் மகிழ்ச்சியாக இருக்க முடியும்” என நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.

 

 

Tags : #MSDHONI #SAKSHIDHONI #MARRIAGE #VIDEO #VIRAL