‘திருமணத்திற்கு’ செல்லும் வழியில்.. ‘எதிரே வந்த பைக்’.. ‘நொடியில்’ நடந்து முடிந்த ‘கோர விபத்து’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Nov 25, 2019 09:18 AM

மதுரையில் திருமணத்திற்கு செல்லும் வழியில் கார் கவிழ்ந்த விபத்தில் 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Madurai Boy Died In Rollover Car Accident While Going To Marriage

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரைச் சேர்ந்த முத்தையா என்பவர் தனது உறவினர்களுடன் காரில் திருமணம் ஒன்றிற்காக சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது கரடிக்கல் அருகே இருசக்கர வாகனம் ஒன்று எதிரே வந்துள்ளது. அதன்மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் காரைத் திருப்பியதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் உருண்டு அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.

இந்த பயங்கர விபத்தில் காரில் இருந்த சக்திவேல் (10) என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் காரில் இருந்த 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து அருகிலிருந்தவர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #ACCIDENT #CAR #MARRIAGE #TWOWHEELER #BOY #DEAD