‘கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பஸ்’! ‘23 பேர் படுகாயம்’.. கல்யாணத்துக்கு போகும்போது நடந்த சோகம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Nov 29, 2019 10:38 AM

திருமணத்துக்கு சென்றபோது பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலர் படுகாயம் அடைந்தனர்.

Bus accident in Himachal Pradesh 23 people injured

இமாச்சல பிரதேச மாநிலம் சிர்மௌர் மாவட்டத்தில் உள்ள ஜங்கா என்ற பகுதியில் இருந்து 23 பேர் திருமணத்துக்கு பேருந்தில் சென்றுள்ளனர். பேருந்து கிரிபுல்லுக்கு அருகில் உள்ள மரியோக் என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் சாலையோரமாக இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது.

இதில் பேருந்தில் பயணித்த 23 பேரும் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல் துறையினர், மீட்புப் படையினரின் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். திருமணத்துக்கு சென்றபோது பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #ACCIDENT #BUS #MARRIAGE #HIMACHALPRADESH #INJURED #PEOPLE