'ஸ்டாலின் முதல்வராவார்!'.. 'நரேந்திரனுக்கு எந்த அதிகாரமும் கிடையாது'.. பாஜக துணைத்தலைவரின் சர்ச்சை பேச்சு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Dec 02, 2019 06:14 PM

தமிழக மாநில பாஜக துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் மு.க.ஸ்டாலின் பற்றி பேசிய சர்ச்சைக்குரிய கருத்தால், அவர் பற்றி கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பப் படுவதாக மாநில பாஜக பொதுச் செயலாளர் நரேந்திரன் குறிப்பிட்டுள்ளார். 

TN BJP Vice President Replies Over his Speech about MKStalin

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விரைவில் முதல்வராவார் என பேசியிருந்த மாநில பாஜக துணைத் தலைவர் அரசகுமாருக்கு டெல்லியில் இருந்து பதில் வரும் வரை கட்சி நிகழ்ச்சிகள், ஊடக விவாதங்களில் பங்கேற்க தடை விதிக்கப்படுவதாக பாஜக மாநில பொதுச் செயலாளர் நரேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆனால், இதற்கு பதில் அளித்த பி.டி. அரசகுமார், தன் மீது நடவடிக்கை எடுக்க நரேந்திரனுக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்றும் தேசிய பொறுப்பாளர் முரளிதரராவிடம் இது பற்றி விளக்கம் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

Tags : #MKSTALIN #BJP #NARENDRAMODI #ARASAKUMAR