“கொரோனா வைரஸ் தாக்கிய 2வது நபர்.. டீடெய்ல்ஸ்லாம் தர முடியாது!”... “கறாராகச் சொன்ன கடவுளின் தேசம்!”

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Feb 02, 2020 07:53 PM

கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

one more person from kerala infected by corona virus

உலகையே உலுக்கிவரும் கொரோனா வைரஸ் சீனாவுன் வுஹான் நகரத்தில் இருந்து பரவத் தொடங்கியதை அடுத்து, அந்நகரில் இருந்து பலரும் வெளியேறினர். சீன அரசும் மருத்துவர்களும் இந்த நோயை கட்டுக்குள் கொண்டுவருவதிலும், இந்த நோயால் பாதிக்கப்பட்டுவர்களுக்கு சிகிச்சைகளை அளிப்பதிலும் மும்முரமாக உள்ளனர். இந்நிலையில் இந்தியாவின் முதல் உறுதி செய்யப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுடன், சீனாவில் இருந்து கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் அறியப்பட்டு திருச்சூர் மருத்துவக் கல்லூரியில் தொடர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சீனாவில் இருந்து கேரளாவுக்கு திரும்பிய மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நபர் ஆலப்புழா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவித்துள்ள கேரள அரசு சுகாதாரத் துறை உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி, பாதிக்கப்பட்ட நபரின் தனிநபர் தகவல்களை வெளியிட முடியாது என்று அறிவித்துள்ளது.

Tags : #KERALA #CORONAVIRUSINDIA