'கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3-வது நபர்'...'யாரும் பீதியாக வேண்டாம்!'.. கேரள சுகாதாரத் துறை!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Feb 03, 2020 04:20 PM

கேரளாவின் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. சீனா உட்பட உலக நாடுகளை ஸ்தம்பிக்க வைத்துள்ள இந்த வைரஸால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. இதுவரை இந்த கொடூர வைரஸால் சீனாவில் மட்டும் 361 பேர் உயிரிழந்துள்ளனர்.

3rd positive case novel corona virus found in kerala

சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய இந்த கொடிய கொரோனா  வைரஸ் அந்நகரில் இருந்து இந்தியாவுக்கு வந்த மாணவர்கள் மூலம் இந்தியாவுக்குள் நுழைந்தது. இந்த வைரஸ் தாக்கம் சீனாவில் இருந்து கேரளாவுக்கு திரும்பிய மாணவிக்கு இருப்பதாக முதன் முதலில் உறுதி செய்யப்பட்டது.

இதனால் இந்தியாவிலேயே கொரோனா வைரஸால் தாக்கப்பட்ட முதல் மாநிலமாக கேரளா அறியப்பட்டது. அதன்பிறகு இதே வைரஸால் பாதிக்கப்பட்ட 2-வது நபரும் கேரளாவில் கண்டறியப்பட்டார்.  பாதிக்கப்பட்ட இருவருமே தனிமையில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மத்திய மற்றும் கேரள சுகாதாரத்துறைகள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில்தான் கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளது. கேரளாவின் காசர்கோடு பகுதியை சேர்ந்த இந்த நபர் சீனாவின் வுஹான் நகரத்துக்கு பயணம் செய்துவிட்டு திரும்பியபோது அவருக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவாக இருப்பதாக (கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக) சோதனையில் தெரியவந்துள்ளது.

இவர் தற்போது கஞ்சன்காடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து

இந்த வைரஸ் தொற்று பரவாமல் இருக்கும் வகையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Tags : #KERALA #CORONAVIRUS