'நான் உங்கள் அணியின் ரசிகனாகி விட்டேன்' ... 'ஜாலி'யாக மழையில் ஆட்டம் போட்ட 'தாய்லாந்து' வீராங்கனைகளுக்கு ... பிரபல 'கிரிக்கெட்' வீரரின் 'ட்வீட்' ! ...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி 20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் தாய்லாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தின் போது மழை குறுக்கிட்ட நிலையில் தாய்லாந்து அணியை சேர்ந்த வீராங்கனைகள் நடனம் ஆடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வரும் பெண்களுக்கான டி 20 உலக கோப்பை போட்டித் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெற்ற லீக் சுற்றுப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தாய்லாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த தாய்லாந்து அணி இருபது ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.
தொடர்ந்து மழை பெய்ததால் தாய்லாந்து வீராங்கனைகள் மைதானத்தின் அருகே மகிழ்ச்சியுடன் ஆட்டம் போட்டனர். இந்த வீடியோவை டி 20 உலக கோப்பையின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் வெளியிட, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரரான ரஷித் கான் 'நான் தாய்லாந்து அணியின் ரசிகனாகி விட்டேன்' என வீடியோவின் கீழ் பதிவிட்டிருந்தார்.
தாய்லாந்து பெண்கள் அணியினர் முதன் முறையாக ஆடிய டி 20 உலக கோப்பை போட்டித் தொடரில் ஒரு ஆட்டத்தில் கூட வெற்றி பெறாத போதும் அவர்களின் இந்த மகிழ்ச்சியான நடனம் கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
Fan of Thailand team now 👏🏻👏🏻
— Rashid Khan (@rashidkhan_19) March 3, 2020
