ஃபானி புயல் வந்துபோனதுக்கு ‘நானே சாட்சி’.. பிறந்த குழந்தைக்கு வைரல் பெயர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | May 03, 2019 05:10 PM
ஃபானி புயல் உருவாகி நாட்டின் பல்வேறு மாநிலங்களின் வழியே கரையை கடந்ததால் சூறாவளி புயல் மற்றும் வெள்ளப் பாதிப்பில் அந்தந்த மாநிலங்கள் நிலைகுலைந்துள்ளன.
வர்தா, நடா, தானே, கஜா புயல்களுக்கு பின்னர் மற்றுமொரு அதி தீவிரமான புயலாக உருவாகிய ஃபானி புயல் தென்இந்தியாவில் தமிழகத்தில் உருவாகி சென்னையில் தோன்றலாம் என எதிர்பார்க்கப்பட்டு அலெர்ட்டாக இருந்த நிலையில், திடீரென யூ-டர்ன் அடித்த புயல் அதன் பின்னர் ஆந்திரா, ஒரிஸா என தன் இருப்பை இடம் மாற்றிக்கொண்டே சென்றது.
அதன் பின்னர் அதிதீவிரமாக உருவாகிய ஃபானி புயல் ஒரிஸா மாநிலத்தின் அருகே கரையைக் கடந்த நிலையில், ஒரிஸாவின் புவனேஸ்வரில் இருக்கும் ரயில் பெட்டி பழுது பார்க்கக் கூடிய தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் ஒருவருக்கு, கனமழையுடன் கூடிய சூழலில் பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், ஃபானி புயலால் அம்மாநிலமே தடுமாறிக்கொண்டிருந்த சூழலில் வெற்றிகரமாக இந்த பூமிக்குள் அவதரித்த அந்த பெண் குழந்தைக்கு அங்கிருந்த மருத்துவர்கள் அனைவரும் கூடி ஃபானி புயலில் நியாபகமாக ஃபானி என்றே பெயர் வைத்தனர். இனி எதிர்காலத்தில் இப்படி ஒரு புயல் தோன்றியதற்கு, ‘நானே சாட்சி’ என்று இந்த பெண் குழந்தை கூறும் அளவுக்கு இந்த பெயர் பிரபலமாகலாம்.