‘அட இப்டியும் ஒரு எம்.பியா’?.. ‘ஆச்சரியமூட்டும் எம்.பியின் செயல், பாராட்டும் மக்கள்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Arunachalam | May 26, 2019 07:46 PM

ஒரு குடிசை வீடு மற்றும் ஒரு சைக்கிளை மட்டுமே சொந்தமாக வைத்துள்ள ஒடிசாவை சேர்ந்த எம்.பி பிரதாப் சந்திராவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

bjp MP who own in loksabha election has only one home, cycle as assets

இந்தியாவில் நடந்து முடிந்த 17 வது மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களில் ஒருவரான பிரதாப் சந்திரா ஒடிசா மாநிலம் பாலசூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், பிரதாப் சந்திரா தேர்தல் சமயத்தில் தனது பிரசாரத்திற்காக ஒரு சைக்கிள் மற்றும் ஆட்டோவை மட்டுமே பயன்படுத்தியுள்ளார்.

எம்.பி ஆகியுள்ள பிரதாப் சந்திரா திருமணம் செய்து கொள்ளாமல் தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த வருடம் தனது தாயார் இறந்த பிறகு ஒரு குடிசையில் வாழ்ந்து வருகிறார். அவர் தனக்கென்று ஒரு சைக்கிள் மற்றும் குடிசை வீடு மட்டுமே சொந்தமாக வைத்துள்ளார்.

மேலும், இவர் மது, ஊழல், போலீஸ் அராஜகத்திற்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில், பாலசூர் தொகுதியில் பழங்குடியினர் படிப்பதற்காக பள்ளிக்கூடம் கெட்டுவதற்கு உதவியுள்ளார். தற்போது, தனது குடிசையிலிருந்து ஒரு பையில் சில துணிகளுடன் டெல்லிக்கு கிளம்பியுள்ளார். இதையடுத்து, இவர் மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுப்பார் மற்றும் எளிமையானவர் என்று பலரும் பிரதாப் சந்திராவை பாராட்டி வருகின்றனர்.