‘வேறு சாதி பையனை காதலித்ததால் ஆத்திரம்’... ‘கிராம மக்கள் ஒன்றுகூடி செய்த அதிர்ச்சி சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Jun 25, 2019 01:01 PM

ஒடிசா மாநிலத்தில் காதலர்களை  சிறைப்பிடித்த கிராம மக்கள், அவர்களது தலையை மொட்டையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Locals Shave Heads of Inter Caste Lovers in odisha

ஒடிசாவின் மயூர்பன்ஜ் மாவட்டம் மாண்டுவா கிராமத்தில், இளைஞர் ஒருவர் தனது காதலியைப் பார்ப்பதற்காக, அவரது வீட்டிற்கு கடந்த 22-ம் தேதி சென்றுள்ளார்.  இதனைப் பார்த்த கிராம மக்கள் அந்த இளைஞரை பிடித்து விசாரித்ததில், அவர் வேறு சாதி என்பது தெரியவந்தது. இதையடுத்து இளைஞரையும், அந்தப் பெண்ணையும் பிடித்து, அடித்து துன்புறுத்தியதோடு, அவர்கள் இருவரது தலையையும் கிராம மக்கள் மொட்டையடித்துள்ளனர்.

மேலும் அதனை செல்போன்களில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியது. பாதிக்கப்பட்ட காதலர்கள், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரையடுத்து 22 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வீடியோவில் இருப்பவர்களை அடையாளம் காண முயன்று வருவதாகவும், விசாரணை நடைப்பெற்று வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதுவரை ஒருவரும் கைதுசெய்யப்படவில்லை.

Tags : #THRASH #LOVERS #ODISHA