ஓடும் ரயிலில் இறங்கும்போது தடுக்கி விழுந்த பயணி..! அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ காட்சி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jun 25, 2019 11:24 AM

ஓடும் ரயிலில் இருந்து பயணி ஒருவர் இறங்கும் போது தடுக்கி விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

WATCH: Man slips from train, Railway cop comes to his rescue

ஒடிஷா மாநிலம் புவனேஷ்வர் ரயில் நிலையத்தில் நேற்று பயணி ஒருவர் மின்சார ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது திடீரென ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயற்சித்துள்ளார். இதனால் எதிர்பாராத விதமாக அவர் நிலைதடுமாறி ரயிலில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

இதனை கவனித்த ரயில்வே காவலர் என்.பி.ராவ் என்பவர் சாமர்த்தியமாக ரயிலில் இருந்து கீழே விழுந்த பயணியை மீட்டுள்ளார். இவை அனைத்தும் ரயில்வே நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதேபோல் சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண்ணை அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது.

Tags : #CCTV #BHUBANESWAR #ODISHA #RPF #TRAIN