‘ஓடும் ரயிலில் கால் தவறி விழுந்து சிக்கிய நபர்’.. நெஞ்சை பதைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jun 19, 2019 10:49 AM

ஓடும் ரயிலில் ஏற முயன்று ரயிலுக்கும், நடைமேடைக்கு இடையில் சிக்கிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Man slips trying to board moving train in Odisha

ஒடிஷா மாநிலம் ஜர்துகா ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ராஜேஷ் தல்வார் என்ற பயணி ஏற முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாரதவிதமாக கால் இடறி ரயிலுக்கும், நடைமேடைக்கு இடையில் சிக்கியுள்ளார். இதனை பார்த்து சக பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனை அடுத்து ராஜேஷ் தல்வாரை அருகில் இருந்த பயணிகள் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால் ரயில் வேகமாக இழுத்து சென்றதால் ராஜேஷ் கீழே விழுந்துள்ளார். இதனால் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது தண்டவாளத்திற்கும், நடைமேடைக்கும் இடையில் உள்ள சிறிய இடைவெளி ஒன்றில் ராஜேஷ் தல்வார் சிக்கி இருப்பது தெரியவந்துள்ளது.

இதனால் நிறுத்தப்பட்ட ரயில் மெதுவாக கடந்து சென்றதுள்ளது. இதனை அடுத்து உடனடியாக தண்டவாளத்தின் ஓரத்தில் சிக்கி இருந்த ராஜேஷை பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த காட்சிகள் அனைத்தும் ரயில்வே நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

Tags : #ODISHA #TRAIN