தம்பி! நீங்க அங்க போய் 'வெளையாட' வேணாம்... நாங்க 'சொல்றத' மட்டும் கேளுங்க... முன்னணி வீரருக்கு 'ஆர்டர்' போட்ட பிசிசிஐ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து கே.எல்.ராகுல் நீக்கப்பட்டார். இதனால் தற்போது அவர் இந்தியா திரும்பி இருக்கிறார். இந்த நிலையில் ரஞ்சி தொடரில் அவர் பங்கேற்க வேண்டாம் என பிசிசிஐ அவரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதனால் ஜம்மு காஷ்மீருக்கு எதிரான காலிறுதி போட்டியில் கர்நாடக அணி சார்பாக ராகுல் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது. அதற்கு பதிலாக பெங்களூரில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் ராகுல் பயிற்சி எடுத்துக்கொள்ள இருக்கிறாராம்.
அதே நேரம் டெஸ்ட் போட்டியில் இடம் பிடிக்காத மற்றொரு பேட்ஸ்மேனான மணீஷ் பாண்டே கர்நாடக அணியின் கேப்டனாக இருப்பதால், ஜம்மு காஷ்மீருக்கு எதிரான காலிறுதி போட்டியில் கர்நாடக அணிக்காக விளையாட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags : #KLRAHUL #CRICKET #BCCI #BENGALURU
