‘சுற்றுலா சென்றபோது’... ‘பிரேக் பிடிக்காததால்’... ‘மலைச் சரிவில் வேன் கவிழ்ந்து நேர்ந்த சோகம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Feb 24, 2020 01:56 PM

வால்பாறை அருகே மலைச்சரிவில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

van crashes into a mountain slump due to lack of brakes

திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த 9 போ், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வேனில் வால்பாறைக்கு சுற்றுலா வந்தனா். அவா்கள் வால்பாறையில் உள்ள சுற்றுலா இடங்களைப் பாா்வையிட்டப் பின்னா், ஞாயிற்றுக்கிழமை மாலை ஊா் திரும்பினா். இவா்களது வேன், வால்பாறை - அட்டகட்டி மலைப்பாதையில் 15-வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது திடீரென பிரேக் பிடிக்காமல் வேன் கட்டுப்பாட்டை இழந்து மலைச் சரிவில் உருண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

திடீரென வேன் கவிழ்ந்ததை எதிர்ப்பார்க்காத வேனில் இருந்த சுற்றுலாப் பயணிகள் கத்தி கூச்சலிட்டனர். அப்போது அந்த வழியாக வாகனங்களில் வந்தவா்கள், வேன் உள்ளே மாட்டிக் கொண்டவர்களை துரிதமாக மீட்டனா். இருப்பினும் வேனில் பயணித்த நாராயணன், அருள்ராஜ், வெள்ளிங்கிரி ஆகிய மூன்று போ் படுகாயமடைந்தனா். அவா்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து காடம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Tags : #ACCIDENT #POLLACHI #TOURIST #INJURED