‘ரூ 15 லட்சம்’ பணம்... புதிய நிறுவனத்தில் ‘வேலை’... மனைவியின் ‘தங்கை’ மீதான ஆசையில்... ‘இன்ஜினியர்’ செய்த ‘நடுங்கவைக்கும்’ காரியம்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Feb 21, 2020 04:21 PM

பெங்களூருவில் கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடைய உறவினர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Bengaluru Obsessed With Wifes Sister Techie Killed Her Husband

பெங்களூரு உரமாவு பகுதியைச் சேர்ந்த தம்பதி லட்சுமண்குமார் - ஸ்ரீஜா. இந்த தம்பதிக்கு குழந்தை ஒன்று உள்ளது. கம்ப்யூட்டர் இன்ஜினியரான லட்சுமண்குமார் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவந்துள்ளார். இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி வேலைக்கு சென்றுவிட்டு மகாதேவபுரா ரிங் ரோட்டில் வந்து கொண்டிருந்த லட்சுமண்குமாரை மர்மநபர்கள் சிலர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இதில் தொடர்புடைய 9 பேரிடம் நடத்திய விசாரணையில் பல அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

போலீஸ் விசாரணையில், லட்சுமண்குமாரை அவருடைய உறவினரான சத்தியபிரசாத் (41) என்பவர் கூலிப்படை வைத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட லட்சுமண்குமாரின் மனைவி ஸ்ரீஜாவின் அக்காவுடைய கணவரே சத்தியபிரசாத் ஆவார். இன்ஜினியரான இவர் ஆந்திராவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்துள்ளார். ஸ்ரீஜா திருமணத்திற்கு முன்பு தனது அக்கா மற்றும் பெற்றோருடன் ஆந்திராவில் வசித்து வந்துள்ளார். திருமணத்திற்கு பின்னரே கணவருடன் அவர் பெங்களூருவுக்கு குடியேறியுள்ளார்.

இதையடுத்து ஸ்ரீஜாவின் மீதான விருப்பத்தில் அவரை அடைய  திட்டமிட்ட சத்தியபிரசாத், அதற்காக லட்சுமண்குமாரை கொலை செய்ய அவர் முடிவு செய்துள்ளார். லட்சுமண்குமாரை கொலை செய்துவிட்டால் வேறு வழியில்லாமல் ஸ்ரீஜா பெங்களூருவில் இருந்து ஆந்திராவுக்கு வந்துவிடுவார். அதன்பிறகு அவரை அடைந்து விடலாம் என சத்திய பிரசாத் நினைத்துள்ளார்.

இதற்காக கூலிப்படையை சேர்ந்த தினேஷ் என்பவரை அணுகிய சத்தியபிரசாத் ரூ 15 லட்சம் பணம் மற்றும் தான் புதிதாக தொடங்கும் நிறுவனத்தில் வேலை தருவதாக கூறியுள்ளார். அதற்கு தினேஷ் மற்றும் அவருடைய மனைவி சாய்தா இருவரும் சம்மதிக்க, முதலில் ரூ 4.50 லட்சம் பணம் கொடுக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒரு முறையும், கடந்த ஜனவரி மாதம் ஒரு முறையும் லட்சுமண்குமாரை கொலை செய்ய தினேஷும், அவருடைய கூட்டாளிகளும் முயற்சித்துள்ளனர். ஆனால் இரு முறையுமே அவர்களால் லட்சுமண்குமாரை கொலை செய்ய முடியாமல் போயுள்ளது.

அதன்பிறகே கடந்த 3ஆம் தேதி ரிங் ரோட்டில் வைத்து லட்சுமண்குமாரை, தினேஷ் மற்றும் அவருடைய கூட்டாளிகள் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர். பின்னர் யாருக்கும் சந்தேகம் வராதபடி, ஐதராபாத்தில் இருந்து குடும்பத்தினரை பெங்களூருவுக்கு விமானத்தில் அழைத்து வந்த சத்தியபிரசாத், போலீசாரிடமும் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இந்த வழக்கில் சத்தியபிரசாத் உடன் சேர்த்து கூலிப்படையை சேர்ந்த தினேஷ், அவருடைய மனைவி சாய்தா, தினேஷின் கூட்டாளிகளான பிரசாந்த், பிரேம், குசாந்த், சந்தோஷ், ரவி, லோகேஷ் ஆகிய 9 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags : #CRIME #MURDER #BENGALURU #ENGINEER #HUSBAND #WIFE #SISTER