‘ஸ்கூலுக்கு போன பொண்ணு’... ‘அங்கேயே இப்டி ஆகும்னு’... 'கதறித் துடித்த பெற்றோர்'... 'அலறிய சக மாணவிகள்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Sep 06, 2019 01:30 PM

பள்ளி வகுப்பறையிலேயே 11-ம் வகுப்பு மாணவி, செய்த விபரீத காரியத்தால் சக மாணவிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் அந்தப் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

11 standard student commit suicide in class itself

மதுரை கே.புதூரை அடுத்த காந்திபுரத்தைச் சேர்ந்தவர் முத்து. கொத்தனார் வேலைப் பார்த்து வரும் இவரின், 16 வயது மகள் அர்ச்சனா, அதேப் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில், 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று அவர் மற்ற மாணவிகள் வருவதற்கு முன்பே, காலை 8 மணிக்கெல்லாம் பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு வகுப்பறைக்கு சென்ற அவர், வீட்டில் இருந்து எடுத்து வந்த சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் இருந்துள்ளார்.

சிறிது நேரத்தில் வகுப்பறைக்கு வந்த சக மாணவிகள், கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால், ஜன்னல் வழியாக இதனைப் பார்த்து அலறியடித்தப்படி ஓடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆசிரியர்களும் வகுப்பறைக்குள் சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவியின் சடலத்தை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு வாகனத்தில் அனுப்பி வைக்க முற்பட்டனர். அப்போது அங்கு வந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அவரது உடலை பார்த்து கதறி துடித்தனர்.

பின்னர் மாணவியின் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகம் தான் காரணம் என அவர்கள் குற்றம் சாட்டினர். மேலும் சடலத்தை எடுத்துச்செல்ல விடாமல் போலீசாருடன், வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார், மாணவியின் சடலத்தை ஒருவழியாக மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரு வாரம் பள்ளி செல்லாத மாணவி, இன்று வீட்டில் இருந்து வரும் போதே, தற்கொலை முடிவுடன், தனது தாயாரின் சேலையை புத்தகப்பையில் மறைத்து எடுத்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #STUDENT #SUICIDE #MADURAI