நம்ம 'சிங்கம்' இப்போ 'டில்லி' ராஜா .. சிறந்த பேட்ஸ்மேன் விருதை வென்ற 'சென்னை' கிங்ஸ் வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Sep 17, 2019 12:28 PM

இளம் பேட்ஸ்மேன்களில் ஒருவரான துருவ் ஷோரே ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். 2015-16-ம் ஆண்டு ரஞ்சி கோப்பையில் தொடங்கிய இவரது சிறப்பான ஆட்டம், இன்றுவரை தொடருகிறது.டெல்லி மாநிலத்தைச் சேர்ந்த துருவ் ஷோரே, ஒரு சிறந்த துவக்க ஆட்டக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

CSK Player Dhruv Shorey bagged best Batsman of the year

இந்தநிலையில் 2018-19-ம் ஆண்டின் சிறந்த பேட்ஸ்மேனாக டெல்லி கிரிக்கெட் சங்கம் இவரைத் தேர்வு செய்து விருது வழங்கியுள்ளது.இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில்,'' நம்ம சிங்கம் இப்போ டில்லி ராஜா.டெல்லி கிரிக்கெட் சங்கம் வழங்கிய 2018-19-ம் ஆண்டிற்கான சிறந்த பேட்ஸ்மேன் விருதை துருவ் ஷோரே வென்றுள்ளார்,'' என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

Tags : #IPL #CSK #CHENNAI-SUPER-KINGS #DHRUVSHOREY