‘ஸ்கூலில் டீச்சர் செய்ற காரியமா இது’... ‘அத்துமீறியதால் அதிர்ந்த மாணவர்கள்’... 'வெளுத்து வாங்கும் வீடியோ'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Sep 10, 2019 09:17 PM

நாமக்கல் அருகே பள்ளி வளாகத்திலேயே, அங்கன்வாடி மைய அமைப்பாளரிடம் தகாத முறையில் பள்ளி ஆசிரியரே ஈடுபட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

teacher misbehaving in school compound itself watch video

நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அடுத்த எஸ்.உடுப்பத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதே வளாகத்தில் அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 4 வருடங்களாக பள்ளி ஆசிரியராக புதன்சந்தையை சேர்ந்த சரவணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கும், அதேப் பள்ளியில் அங்கன்வாடி மைய பொறுப்பாளராக பணியாற்றி வரும் ஜெயந்திக்கும், தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பள்ளி வளாகத்திலேயே, ஆசிரியர் சரவணனும், அங்கன்வாடி அமைப்பாளர் ஜெயந்தியும், பள்ளி கழிவறையில் தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்ட  பள்ளி மாணவர்கள், தங்களின் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். பெற்றோர்களும் ஊர் பொதுமக்களும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். இதன்பின்னர் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயராஜ், இருவரையும் அழைத்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் மீண்டும் பள்ளியின் ஆசிரியர் சரவணனும், அங்கன்வாடி அமைப்பாளர் ஜெயந்தியும், பள்ளி வளாகத்திலே தகாத உறவில் ஈடுபடமுயன்றதாக தெரிகிறது. இதனையறிந்த ஊர் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளியில் இருந்த ஆசிரியர் சரவணன் வகுப்பறைக்கு சென்று, அவருக்கு தர்ம அடி கொடுத்தனர். சம்பவம் குறித்து பள்ளிக்கு வந்த கல்வி அதிகாரிகள் மற்றும் புதுச்சத்திரம் காவல்துறையினர் பள்ளி ஆசிரியர் சரவணனை மீட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #STUDENT #TEACHER #NAMAKKAL