'எக்ஸ்ரே எடுத்து பார்த்தப்போ...' 'ஒண்ணு இல்ல, ரெண்டு இல்ல மொத்தம் 11 இருந்துச்சு...' 'குழந்தையின் உடலைக் கண்டு அதிர்ந்து போன மருத்துவர்கள்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Mar 05, 2020 06:46 PM

தெலங்கானாவைச் சேர்ந்த மூன்று வயது குழந்தையின் உடலில் 11 ஊசிகள் சிக்கியிருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

11 needles inside the body of a three year old child

வனபர்த்தி மாவட்டத்தை சேர்ந்த அசோக் மற்றும் அன்னபூர்ணா தம்பதியரின் மூன்று வயது மகன் லோக்னாத். நீண்ட நாட்களாக சிறுவனின் உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது சிறுவனுக்கு எக்ஸ்ரே மூலம் உடல் பரிசோதிக்கப்பட்டது. எக்ஸ்ரே அறிக்கையை மருத்துவர்கள் பார்த்தபோது அதிர்ந்து போயினர். சிறுவனின் உடலில் சிறுநீரகத்திற்கு அருகிலும், ஆசனவாயிலிலுக்கு மேல்பக்கமாகவும்  ஊசிகள் இருந்தது. அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் ஊசிகளை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சிறுவனின் உடலில் மொத்தம் 11 ஊசிகள் இருந்ததாகவும், அதில்  எட்டு ஊசிகள் மட்டுமே அகற்ற முடிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மீதமுள்ள மூன்று ஊசிகளும் உடலின் முக்கிய பாகங்களில் சிக்கிக் கொண்டிருப்பதால் அதை அகற்றுவதில் சிக்கல் நீடிப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து சந்தேகம் அடைந்த சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிறுவனை அடிக்கடி அழைத்து செல்லும் இரு நபர்கள் மீது சந்தேகமடைந்த காவல்துறை, அவர்களை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Tags : #BABY