'பெத்த வயிறு துடிக்குதே'... 'தண்ணீர் தொட்டியில் நடந்த கொடூரம்'... மனைவி கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Feb 06, 2020 10:26 AM

தண்ணீர் தொட்டியில் ஒன்றரை வயதுக் குழந்தை இறந்து கிடந்த அதிர்ச்சி சம்பவத்தில், கணவன் மீது மனைவி சந்தேகம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Virudhunagar : One year old baby drowns in Water Tank

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்தவர் அமல்ராஜ். இவரது மனைவி சுஸ்மிதா. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆகாஷ் என்ற குழந்தை உள்ளது. சம்பவத்தன்று குழந்தையைத் தனியாக வீட்டில் விட்டுவிட்டு தாய் சுஸ்மிதா அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அவர் திரும்பி வந்து பார்த்தபோது குழந்தை ஆகாஷ் வீட்டிலிருந்த தண்ணீர் தொட்டியில் சடலமாக மிதந்துள்ளான். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அழுது கூச்சல் போட்டுள்ளார்.

சுஸ்மிதாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார்கள். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அப்போது தாய் கூறிய தகவல் தான் காவல்துறையினர் உட்படப் பலரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.

குழந்தையின் சாவில் மர்மம் இருப்பதாகவும், குழந்தையைத் தனது கணவர் தான் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்திருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ளார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #VIRUDHUNAGAR #WATER TANK #DROWNS #BABY