'நம்பர் 1' , 'நம்பர் 2' எல்லாம் பாப்பா விளையாட்டு ... ஐ ஆம் தி ஒன்லி ஒன் 'சூப்பர்' ஒன் ... 'வயதான' போதும் ஸ்டம்ப்புகளை தெறிக்க விட்ட 'யார்க்கர்' ஸ்பெஷலிஸ்ட் !
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிகள் மோதிய டி 20 போட்டியில் இலங்கை பந்து வீச்சாளர் மலிங்கா, வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் ஆன்ட்ரே ரசலை யார்க்கர் பந்தில் ஆட்டமிழக்க செய்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் டி 20 போட்டி ஒன்றில் மோதின. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இருந்த போதும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஆன்ட்ரே ரசல் பந்துகளை பவுண்டரிகளுக்கு பறக்க விட்டுக் கொண்டிருக்க, அப்போது பந்து வீச வந்த மலிங்காவின் பந்தை எதிர்கொண்ட ரசல், அவரது யார்க்கர் பந்தில் போல்ட் ஆனார்.
ஐ.பி.எல் போட்டிகள் நெருங்கி வரும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடவுள்ள லாசித் மலிங்கா 36 வயதான போதும் துல்லியமாக யார்க்கர் பந்தை வீசி வருவதால் ஐ.பி.எலில் அவரின் யார்க்கரை பார்க்க ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் உள்ளனர்.
Malinga at his absolute best 💥#SLvWI pic.twitter.com/fvnRq54D4r
— SANDEEP (@SanjuRo45_) March 4, 2020
