'கணவன் மனைவிக்குள் சண்டை'... 'சப் இன்ஸ்பெக்டர் எடுத்த கோர முடிவு'... சென்னையில் நடந்த அதிர்ச்சி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jul 09, 2019 01:45 PM

குடும்பத்தில் நிலவிய பிரச்சனையின் காரணமாக சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் கழுத்தறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

special sub inspector from chennai committed suicide

சென்னை வடபழனி காவல்நிலையம் அருகில் இருக்கும் காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருபவர்  சேகர். இவர் பணியிலிருந்து ஓய்வு பெற இருக்கும் நிலையில், பரங்கிமலையில் உள்ள பயிற்சி பள்ளியில் உதவி ஆய்வாளர்க்கான பயிற்சியை கடந்த திங்கள்கிழமை துவங்கினார். இதனிடையே குடும்பத்தில் சேகருக்கும் அவரது மனைவிக்கும் அவ்வப்போது பிரச்னை எழுந்த வண்ணம் இருந்தது. இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இரண்டு நாட்கள் மட்டும் பயிற்சிக்கு சென்ற சேகர், 5 நாட்களாக பயிற்சிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தாக கூறப்படுகிறது. மேலும் மன அழுத்தத்தின் காரணமாக மதுவுக்கு அடிமையான சேகர், அளவுக்கு அதிகமாக குடிக்க ஆரம்பித்திருக்கிறார். சம்பவத்தன்று மனைவியும், மகனும் பணிக்கு சென்று விட வீட்டில் தனியாக இருந்த சேகர் குடும்ப பிரச்சனையை நினைத்து விரக்தியின் எல்லைக்கு சென்ற அவர்,கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில் மாலையில் வீடு திரும்பிய சேகரின் மனைவி கணவரின் நிலையை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார். பின்னர் இச்சம்பவம் குறித்து அருகில் உள்ள வடபழனி காவல் நிலைத்திற்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த போலீசார் காவலர் குடியிருப்பிற்கு சென்று தற்கொலை செய்துகொண்ட சேகர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக இராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனிடையே சிறப்பு உதவி ஆய்வாளரின் தற்கொலை சென்னை காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #POLICE #CHENNAI CITY POLICE #SUB INSPECTOR #SUCIDIE