'அசுரவேகத்தில் வந்த'.. 'சின்னத்திரை நடிகரின் கார்'.. 'உயிரைப் பறித்த பரிதாபம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Oct 30, 2019 12:24 PM

சின்னத்திரை நடிகர் மனோ என்பவர் விபத்தினால் மரணமடைந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளதாக அவரது நண்பர் கமல் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

TN TV actor mano dead by accident, CCTV footage leaked?

லொள்ளுபா, மானாட மயிலாடா, விஜய் டிவி சாம்பியன்ஸ் உள்ளிட்ட டிவி நிகழ்ச்சிகளிலும், விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளை உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்து வந்த சின்னத்திரக் கலைஞர் நடிகர் மனோ கடந்த் 28-ஆம் தேதி ஆவடி அருகே தனது மனைவியுடன் திரும்பி வந்துகொண்டிருந்தபோது, வழியில் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இவருடன் வந்த இவரது மனைவி தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஆவடி அருகே நடந்த அந்த விபத்தின்போது பதிவான சிசிடிவி காட்சிகள் இணையதளங்களில் வலம் வருகின்றன. அதில் கார் ஒன்று வேகமாக வருகிறது. அந்த சாலையில் குறுக்கே செல்லும் இருசக்கர வாகனத்தில் கார் மோதி விபத்துக்குள்ளாகிறது.

அந்த காரில் வந்ததுதான் மனோ என்றும், இது மனோ விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிதான் என்றும் அவரது நண்பர் கமல் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். எனினும் அந்த வீடியோ செங்கல்பட்டு அருகே நடந்த வேறு ஒரு விபத்து சம்பவத்தின் வீடியோ என்று தகவல்கள் கிடைத்துள்ளன.

தவிர தீவிர சிகிச்சைப் பிரிவில் போராடிக் கொண்டு வரும் மனோவின் மனைவி லிவியாவுக்கு மனோவுக்கும் யுகேஜி படித்து வரும் மகள் ஒருவர் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவரது மரணத்திற்கு இயக்குநர் மற்றும் நடிகர் மனோபாலா இரங்கல் தெரிவித்து ட்வீட் பதிவிட்டிருந்தார்.

Tags : #ACCIDENT #ACTOR #MANO