'ஷேர் ஆட்டோவும் பேருந்தும் மோதி கோர விபத்து'.. சம்பவ இடத்திலேயே நேர்ந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Oct 24, 2019 03:35 PM

திருவள்ளூர் அருகே ஷேர் ஆட்டோவும் மீது பேருந்தும் வந்த வேகத்தில் மோதிக்கொண்டதால் சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

Accident near thiruvallur Auto and bus clash together

சிவபுரத்தில் இருந்து தலக்காஞ்சேரிக்கு நாற்று எடுக்கும் பணிக்காக செல்லும் விவசாயத் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வந்த ஷேர் ஆட்டோ, பேரம்பாக்கம் அருகே உள்ள திருப்பாச்சூர் என்கிற இடத்தை அடைந்தபோதுதான் எதிரே வந்த தனியார் தொழிற்சாலைப் பேருந்து ஒன்றின் மீது மோதியதால் இந்த பரிதாபத்துக்குரிய விபத்துக்கு உள்ளானது.

இந்த சம்பவத்தில் பேருந்தின் முன்புறம் அடிவாங்கியது. மேலும் விபத்தில் கூலித் தொழிலாளர்கள் கார்த்தி, மணி, வேலு உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் பலியாகினர். தவிர 8 பேர் படுகாயம் அடைந்ததை அடுத்து திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #ACCIDENT #BUS #THIRUVALLUR