'மரத்தில் மோதி'.. 'உடல் கருகி மரணம்' .. 'பேட்டரி காரினால் வந்த வினையா?'!

முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்

By Siva Sankar | Oct 24, 2019 06:36 PM

நவீன எதிர்காலத்துக்கான காராக அறிமுகமான பிரபல பேட்டரி காரின் சிறப்பு அம்சங்களால் அமெரிக்க மருத்துவர் ஒருவர் உயிரிழந்ததாக அவரது குடும்ப வழக்கறிஞர் கூறியுள்ள சம்பவம் பதைபதைக்க வைத்துள்ளது.

man dies in accident after battery car busted while driving

நவீன தொழில்நுட்பத்துடன் எதிர்கால உலகின் தேவையாகக் கருதப்படும் பேட்டரி காரினை கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் ஓமர் அவான் இயக்கிச் சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து, அருகிலிருந்த பனை மரத்தில் மோதியுள்ளது.

மோதிய வேகத்தில் கார் தீப்பற்றி எரிந்ததோடும் ஓமர் தீயில் கருகி உருவம் தெரியாத அளவுக்கு உயிரிழந்துள்ள சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதற்கு காரணம் காரில் இருந்து லித்தியம் பேட்டரிதான் என்றும், காரின் ஆட்டோ பைலட் என்கிற நவீன அமைப்பினால் கார் கதவை திறக்க முடியாமல் போனதும் ஓமர் உயிரிழந்ததுக்கு ஒரு காரணம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

எனினும் இதுகுறித்து கார் நிறுவன தரப்பில் இருந்து எந்த விளக்கமும் தரப்படவில்லை என தெரிகிறது.