‘நொடிப்பொழுதில் ஆட்டோவும், லாரியும்’.. ‘நேருக்கு நேர் மோதி கோர விபத்து’.. ‘மதுரையில் 6 பேர் பலியான பயங்கரம்’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Saranya | Oct 25, 2019 07:05 PM
மதுரையில் ஆட்டோவும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

மதுரையில் உசிலம்பட்டி அருகே கோடாங்கிநாயக்கன்பட்டி மற்றும் பக்கத்து ஊரைச் சேர்ந்த 13 பேர் தீபாவளி பொருட்கள் வாங்கிக் கொண்டு ஷேர் ஆட்டோவில் சென்றுகொண்டிருந்துள்ளனர். அப்போது எதிரே எழுமலை நோக்கி வந்த லாரி ஒன்று கண் இமைக்கும் நேரத்தில் ஆட்டோவின் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது.
இந்த கோர விபத்தில் அசோக் (45), முத்துலட்சுமி (50), வாசியம்மாள் (45), சத்யா (38), குருவம்மாள் (50) மற்றும் முருகன் (45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் நாகஜோதி (30), தனுஷாஸ்ரீ (10), சர்மிளா (9), வசந்தா (45), அய்யர் (48) ஆகியோர் காயம் அடைந்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுதொடர்பாக லாரி ஓட்டுநரை கைது செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீபாவளியையொட்டி நடந்த இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
