‘இருசக்கர வாகனம் மீது கார் மோதி கோர விபத்து’.. ‘நொடிப்பொழுதில் இளைஞர்களுக்கு நேர்ந்த பயங்கரம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Oct 28, 2019 10:24 PM

இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

3 Injured in Car Two Wheeler Accident near Chennai CCTV Video

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த காட்டாங்கொளத்தூரைச் சேர்ந்த 3 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் திருச்சி - சென்னை நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றுள்ளனர். எதிரே வாகனங்கள் வருவதைப் பார்க்காமல் அவர்கள் சாலையைக் கடக்க முயற்சித்தபோது, அதிவேகத்தில் வந்த கார் ஒன்று அவர்கள் மீது மோதியுள்ளது. மோதிய வேகத்தில் இருசக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டதோடு, காரும் சாலையின் நடுவில் இருந்த தடுப்புச் சுவற்றில் மோதி தலைகீழாகக் கவிழ்ந்து சுழன்றுள்ளது.

இந்த பயங்கர விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேருக்கும் கை, கால் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #ACCIDENT #CAR #BIKE #INJURED #CHENNAI #KANCHIPURAM #CHENGALPATTU #KATTANKULATHUR