‘அசுர வேகத்தில் வந்த இருசக்கர வாகனம்’.. ‘லாரி மீது மோதி கோர விபத்து’.. ‘ரேஸ் மோகத்தால் இளைஞர்களுக்கு நடந்த பயங்கரம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Oct 23, 2019 06:33 PM

நாமக்கல்லில் ரேஸில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் லாரி மோதிய விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

Namakkal 2 Youngsters died in Lorry Bike Accident

நாமக்கல் புதிய பேருந்து நிலையம் அருகே நள்ளிரவில் செங்கல் லாரி ஒன்று சென்றுகொண்டிருந்துள்ளது. லாரி ஒரு வளைவில் திரும்பியபோது எதிர் திசையில் அசுர வேகத்தில் வந்த இருசக்கர வாகனம் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த ஹசன், ரோஹித் என்ற 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த மணி என்ற இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் விபத்தில் சிக்கிய 3 பேர் உட்பட 10 இளைஞர்கள் 4 இருசக்கர வாகனங்களில் ரேஸில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #NAMAKKAL #ACCIDENT #YOUGSTERS #BIKE #LORRY #RACE #DEAD #INJURED