'காருக்குள் உல்லாசம்'.. 'போலீஸிடம் இருந்து தப்பித்த ஜோடியால்'.. 'இருசக்கர வாகன ஓட்டிக்கு நேர்ந்த சோகம்'!
முகப்பு > செய்திகள் > உலகம்By Siva Sankar | Oct 25, 2019 04:37 PM
ஓடும் காரில் கல்லூரி ஜோடி ஒன்று, உறவில் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவில் உள்ள ஒரு சாலையில், கார் ஒன்று அதிவேகமாக சென்றுக்கொண்டிருந்தது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த போலீசார், வழக்கத்தை விட வேகமாக சென்றுக்கொண்டிருந்த அந்த காரை மடக்கி பிடிக்க முயன்றனர். இதனை கண்ட, அந்த காரில் இருந்த கல்லூரி ஜோடி போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக, காரின் வேகத்தை அதிகரித்து ஓட்டிச்சென்றுள்ளனர்.
ஆனால் அதிக வேகத்தில் சென்ற அந்த கார், ஒரு இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் தூக்கி வீசப்பட்டு, கால் எலும்பு முறிந்து படுகாயமடைந்தார். பின் அந்த காரை போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது அந்த காரில் கல்லூரி இளம் ஜோடி இருவரும் உல்லாசமாய் இருந்துள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
