'யார்ரா இந்த வேலைய பாத்தது?'..'இங்க வா'.. 'கர்மான்னா என்னனு உனக்கு காட்றேன்'.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்By Siva Sankar | Sep 13, 2019 06:03 PM
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும், ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும், விதை விதைத்தவன் வினை அறுப்பான் என பல விதமான பழமொழிகள் கர்மா என்று சொல்லப்படும் முன்வினைக்குச் சொல்லப்படுவதுண்டு.

ஒரு காரியத்தை ஒருவர் செய்யும்போது அதற்கான எதிர்ப்பலனை அல்லது பலனை அவர் அந்த கணமே மீண்டும் அனுபவிப்பார் என்பதைத்தான் அவ்வாறு சொல்கிறோம். அப்படித்தான் இளைஞர் ஒருவர் அசகாயமான சாகசங்களில் ஈடுபடுவதை ட்விட்டரில் ஒருவர் ஷேர் செய்து பாராட்டியிருந்தார்.
இந்த வீடியோவுக்கு ரெஸ்பான்ஸ் செய்த இன்னொருவர் தன் பங்குக்கு ஒரு வீடியோவை பதிவிட்டார். அந்த வீடியோவின்படி, மூன்று நாய்கள் வெறித்தனமாக சண்டையிட்டுக் கொண்டிருந்துள்ளன. விவசாயம் நடக்கும் நிலத்தில் சண்டையிட்டுக் கொண்டிருந்த இந்த நாய்களை கவனித்த அங்கிருந்த ஒரு நபர், நாய்களின் சண்டையை நிறுத்தம் பொருட்டு ஒருநாய் மீது கல்லை எறிந்துள்ளார்.
அவ்வளவுதான், அப்படியே அவர் பக்கம் திரும்பிய அந்த நாய், தான் பிஸியாக சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது தொந்தரவு செய்த அந்த நபரின் மீது பாய்ந்தது. அவரோ நாய் பாய்ந்த வேகத்தில் அங்கிருந்து தூக்கி வீசப்பட்டு, கரும்பு அரைக்கும் வண்டியின் சக்கரத்தில் சிக்கி சுற்றப்பட்டு, ஒரு சுற்று முடிந்ததும் வெளியே வருகிறார்.
இந்த சம்பவம் பாகிஸ்தானில் நடந்ததாகவும் இதற்கு பேர்தான் கர்மா என்றும் பதிவிட்டு ஒருவர் இந்த வீடியோவை பகிர, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
😂😂 I think somewhere in Pakistan Someone also has same talent pic.twitter.com/KxVRHsOHeR
— लगभग नाराज़ आलू Reloaded ® (@TohMaiKyaKaruu) September 9, 2019
