'இருங்கப்பா.. புண் பட்ட நெஞ்சை புகைவிட்டு ஆத்திக்கிறேன்!'.. சிம்பன்ஸி குரங்கு செய்த 'வேற லெவல்' வேலை!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்By Siva Sankar | Nov 05, 2019 01:15 PM
சீனாவில் உள்ள பிரல விலங்கியல் பூங்கா ஒன்றில் சிம்பன்ஸி குரங்கு சிகரெட் பிடிப்பது போல் வெளியான வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் விலங்கியல் பூங்கா ஒன்றுக்கு சென்ற பார்வையாளர் ஒருவர் அங்குள்ள சிம்பன்ஸி குரங்கினைப் பார்த்துள்ளார். சிகரெட் புகைத்துக்கொண்டிருந்த அவர் அந்த சிகரெட் துண்டினை சிம்பன்ஸி குரங்கை நோக்கி வீசி ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக அந்த சிம்பன்ஸி சிகரெட்டை எடுத்து புகைக்கத் தொடங்கியது.
13 வயதேயான வான் ஸிங் என்கிற பெயருடைய அந்த சிம்பன்ஸி குரங்கு முதலில் சிகரெட் துண்டினை எடுத்து நுகர்ந்து பார்த்துள்ளது. அதனுடைய வாசனை பிடித்துப் போனது போல, உடனே புகைக்கத் தொடங்கியது. ஆனால் சிகரெட்டினை மூச்சுக்காற்றின் வழியே உள்ளிழுத்து புகைக்க வேண்டும் என்பதை எப்படி சிம்பன்ஸி அறிந்து வைத்திருந்தது என்பதுதான் யாருக்கும் புரியாத புதிராக இருந்தது.
