'முன்னாடி இருக்குறது காவல்துறைங்குற நெனைப்பே இல்ல?'.. இளைஞர் போட்ட 'வேறே லெவல்' ஆட்டம்! வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Oct 31, 2019 03:14 PM
போலீஸார் வாகனத்தை மறித்து கொண்டாட்டத்தை வெளிப்படுத்திய இளைஞரது செயல் வீடியோவாக இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

காவல்துறையினரின் வேன் முன் சென்று நின்று, அந்த வாகனத்தை தடுத்து ஆட்டமாடுகிறார். அதே பரவசத்துடன் காவலர்கள் அமர்ந்துள்ள இடத்துக்குச் சென்று அங்கிருந்த குடைக்குள் நின்றுகொண்டு கெத்து காட்டி ஆருகிறார். தலையில் கர்ச்சீஃபும் முகத்தில் கண்ணாடியும் அணிந்திருந்த இவரது ஆட்டம் அந்த தாளத்திற்கேற்ப தனியே தெரிந்தது என்று சொல்லலாம்.
சிக்காமலா போய்டுவ... அன்னைக்கு இருக்குடா உனக்கு கச்சேரி 😂😀#தேவர்ஜெயந்தி pic.twitter.com/63u6b2mMnn
— நித்யா (@nithya_shre) October 30, 2019
தேவர் ஜெயந்தி நாளன்று நடந்த நிகழ்வுக்கு பாதுகாப்பு கொடுத்து போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இத்தகைய சம்பவத்தை இளைஞர் ஒருவர் தனியொருவராக அரங்கேற்றியதாகத் தெரிகிறது. எனினும் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், இளைஞரின் துடிப்பான செயல்களை பெரிதாய் எடுத்துக்கொண்டு பிரச்சனையாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
