‘பழைய’ விலையிலேயே... ‘டபுள்’ டேட்டா, டாக் டைம்... ‘பிரபல’ நிறுவனம் அறிவித்துள்ள ‘சூப்பர்’ ஆஃபர்கள்...

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Saranya | Mar 20, 2020 06:46 PM

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் ஆட்-ஆன் பிளான்களில் இருமடங்கு பலன்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.

Reliance Jio Prepaid Add Packs Offer Double Data Talktime

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ரூ 11, ரூ 21, ரூ 51 மற்றும் ரூ 101 ஆட்-ஆன் பிளான்களில் வாடிக்கையாளர்களுக்கு முறையே 400 எம்பி, 1 ஜிபி, 3 ஜிபி மற்றும் 6 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த பிளான்களில் தற்போது இருமடங்கு டேட்டா வழங்குவதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி ரூ 11, ரூ 21, ரூ 51 மற்றும் ரூ 101 ஆட்-ஆன் பிளான்களில் முறையே 800 எம்பி, 2 ஜிபி, 6 ஜிபி மற்றும் 12 ஜிபி டேட்டா தற்போது  வழங்கப்படுகிறது. அத்துடன் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் எண்களுக்கான வாய்ஸ் கால் அழைப்பு நிமிடங்களும் இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த பிளான்களில் வாடிக்கையாளர்களுக்கு 75, 200, 500 மற்றும் 1000 நிமிடங்கள் வாய்ஸ் கால் அழைப்புகள் வழங்கப்படுகிறது. இந்த பிளான்களில் வழங்கப்படும் டேட்டா உள்ளிட்ட சலுகைகளை ஏற்கெனவே உள்ள பிளான்களின் டேட்டா தீர்ந்ததும் பயன்படுத்தப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #MONEY #AIRTEL #JIO #VODAFONE #BSNL #OFFER