'உதவி செய்வதுபோல் நடந்துக் கொண்ட நபரால்'... 'சென்னையில் முதியவருக்கு நேர்ந்த அதிர்ச்சி'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Mar 16, 2020 08:31 PM

சென்னையில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்த முதியவரை ஏமாற்றி ஒரு லட்சம் ரூபாய் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Person has cheated like helping an elderly man from Ayodhya

சென்னை திருவல்லிக்கேணி அயோத்தியா நகரைச் சேர்ந்தவர் 62 வயதான முதியவர் ராஜேந்திரன். இவர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் உதவியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். கடந்த 10-ம் தேதி திருவல்லிக்கேணி துளசிங்க பெருமாள் கோயில் தெருவில் உள்ள ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்திற்கு சென்ற இவர், தனது கனரா வங்கி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்றார். 

அப்போது முதியவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர், பணம் எடுத்து கொடுக்க உதவி செய்வதாக கூறியுள்ளார். பணம் எடுத்தப் பின்னர், தான் வைத்திருந்த போலி ஏடிஎம் கார்டை ராஜேந்திரனிடம் மாற்றி கொடுத்துவிட்டு அந்த நபர் சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து அவரது வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 1.13 லட்சம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக வந்த குறுஞ்செய்தியை கண்டு ராஜேந்திரன் அதிர்ச்சியடைந்தார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ராஜேந்திரன் உடனே ஐஸ்ஹவுஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். முதியவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார், ஏடிஎம் மையத்தின் சிசிடிவி காட்சிகளை வைத்து நூதனமாக திருடிய நபரை தேடி வருகின்றனர்.

Tags : #CHEATING #ATM #MAN #OLD