‘இந்த 2 வருஷத்துல மட்டும் ரூ.547 கோடி!’.. ‘உங்க அனுமதியே தேவையில்ல!’.. ‘மிரட்டும் டெபிட் கார்டு, ஏடிஎம், நெட் பேங்கிங் மோசடிகள்’!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்நம்மிடம் இருந்து , நமக்கே தெரியாமல் நம் தகவல்களைத் திருடிக்கொண்டு பெருகி வரும் கிரெடிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மோசடிகள் அதிரவைத்துள்ளன.

கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் மட்டும் 128 கோடி மோசடிகள் நிகழ்ந்துள்ளதாகவும், சென்ற ஆண்டு இறுதியில் மட்டும் 21 ஆயிரத்து 41 மோசடிக் குற்றங்கள் நடந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளன. ஒரு நிமிடத்துக்கு 6 வழக்குகள் இது தொடர்பாக பதியப்படுவதுதான் கூடுதல் அதிர்ச்சி தரும் தகவல்.
இந்தியன் ரிசர்வ் வங்கியோ, இதுபற்றி கூறும்போது, ‘இந்த 92 நாட்களில் அதிக அளவிலான மோசடிகள் (94.52%) ஏடிஎம் மற்றும் டெபிட் கார்டு மூலமாகவே நடந்துள்ளன. இவற்றுள் 11 ஆயிரத்து 508 மோசடிகளுள் 6 ஆயிரத்து 117 மோசடிகள் கிரெடிட் கார்டு மோசடிகள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி 3 ஆயிரத்து 866 நெட் பேங்கிங் மோசடிகளால் ரூ.197 கோடி மற்றும் ரூ.3.6 கோடி உள்ளிட்ட மதிப்பீட்டிலான பரிவர்த்தனைகள் சுரண்டப்பட்டுள்ளன’ என்று தெரிவித்துள்ளது.
அதாவது டிசம்பர் 2019 வரையிலான கடந்த 2 வருடங்களில் மட்டும் மொத்தமாக 547 கோடி ரூபாய் வரையிலான மோசடிகள் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலம் நடந்துள்ளதாக பதிவாகியுள்ளன. இவை பெரும்பாலும் ஏடிஎம் ஸ்கிம்மர்ஸ் எனும் சிறிய கருவியை ஏடிஎம்மில் பொருத்தி, வாடிக்கையாளர்களின் தகவல்கள் இண்டர்கிரேடட் ஸ்ட்ரைப் ரீடர் மூலம் திருடப்பட்டும், அதில் இருக்கும் ரகசிய கேமரா மூலம் வாடிக்கையாளர்களின் ஏடிஎம் பின் நம்பர்கள் கண்காணிக்கப்பட்டும் நடந்துள்ளதாக சைபர் க்ரைம் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
