‘இது 651-வது வைரஸ்’!.. ‘ATM மெஷின்ல இருந்துகூட கொரோனா பரவும்’.. புது தகவல் கொடுத்த வல்லுநர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஏடிஎம்களில் பணம் எடுக்கும்போது கூட கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளதாக பூச்சியியல் வல்லுநர் மணிவர்மா தெரிவித்துள்ளார்.
சென்னை தரமணியில் உள்ள சென்னை பல்கலைகழகத்தில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் தமிழக அரசின் பொதுசுகாதாரத்துறை இயக்குநரகம் சார்பில் பூச்சியியல் முதுநிலை வல்லுநர் மணிவர்மா கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை மாணவர்களுக்கு விளக்கினார்.
கடந்த 1960ம் ஆண்டிலேயே கொரோனா வைரஸை நாம் சந்தித்திருக்கோம் என்றும், இதுவரை 650 வைரஸ் உள்ள நிலையில் 651-வது வைரஸ் கொரோனா என்றும் தெரிவித்தார். இந்த வைரஸ் கிருமியானது விலங்குகளிடமிருந்தோ, பூச்சிகளிடமிருந்தோ பரவுவது இல்லை என்றும், சுத்தத்தைக் கடைபிடிக்காத மனிதர்களிடமிருந்துதான் மனிதர்களுக்கு பரவும் என்றும் விளக்கியுள்ளார்.
சாதரணமாக ஒருவர் தும்மும் போது 70 கிலோமீட்டர் வேகத்தில் மூச்சுத்துகள்கள் காற்றில் பயணிக்கும் என்றும் 1 மீட்டர் சுற்றளவுக்கு பரவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு கழிவறையில் இருக்கின்ற வைரஸ் கிருமிகளுக்கு இணையாக ஏடிஎம்களில் பின் நம்பர் பதிகின்ற இடத்தில் வைரஸ் கிருமிகள் தேங்கி இருப்பது ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் அங்கிருந்தும் கொரோனா வைரஸ் தொற்றிக்கொள்ள வாய்ப்புள்ளதாக கூறி முன்னெச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தி மிக்கவர்களிடம் ஒரு வாரம் வைரஸ் தொற்று இருந்தாலும் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது என்றும், தானே செயல் இழந்துவிடும் என்றும் மணிவர்மா தெரிவித்துள்ளார்.
News Credits: Polimer News