₹50 ஆயிரத்துக்கு மேல 'எடுக்க' முடியாது சொன்னீங்க?... இங்க ₹1300 கோடிய 'அசால்ட்டா' எடுத்து இருக்காங்க... என்ன நடக்குது?
முகப்பு > செய்திகள் > வணிகம்மோசமான நிதிநிலை காரணமாக பிரபல தனியார் வங்கியான எஸ் பேங்கை ரிசர்வ் வங்கி தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுக்க முடியாது என புதிய கட்டுப்பாட்டினை ரிசர்வ் வங்கி விதித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் தங்களது சம்பள பணத்தினை கூட எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் எஸ் பேங்கில் இருந்து திருப்பதி தேவஸ்தானம் மொத்தமாக ரூபாய் 1300 கோடியை கடந்த மாதம் எடுத்துள்ள விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. எஸ் பேங்கின் நடவடிக்கைகள் கடந்த சில மாதங்களாக சரியில்லை என்பதை அறிந்த திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி மொத்த பணத்தையும் எடுத்துவிட முடிவு செய்துள்ளார். அதன்படி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் தகவல் அளித்த பின்னர், மொத்த பணத்தையும் திருப்பதி தேவஸ்தானம் எஸ் பேங்கில் இருந்து எடுத்துள்ளது.
