'நீங்க போங்க' ... 'நானே எடுத்துக்குறேன்' ... பணம் எடுத்ததாக வந்த குறுஞ்செய்தியால் அதிர்ச்சியடைந்த பெண்

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Mar 06, 2020 12:52 PM

தேவகோட்டை அருகே ஏ.டி.எம்மில் பணமெடுக்க வந்த பெண்களை ஏமாற்றி, அவர்களுடைய வங்கி கணக்கு மூலம் பணத்தை எடுத்து ஏமாற்றிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

Forgery by a Women in ATM near Sivagangai district

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே அனு என்பவர், மகளிர் சுயஉதவி குழு மூலம் கிடைத்த பணத்தை எடுக்க தனது தாயாருடன் ஏடிஎம் வந்துள்ளார். அப்போது ஏடிஎம்மில் இருந்த பெண் ஒருவர், அவர்களுக்கு உதவுவது போல் நடித்து, பின்னர் பணம் வரவில்லை என கூறி அனு மற்றும் அவரது தாயாரிடம் ஏடிஎம் அட்டைக்கு பதில் வேறு அட்டை ஒன்றை கொடுத்து ஏமாற்றி அனுப்பியுள்ளார். அவர்கள் சென்ற பிறகு அதை வைத்து 34 ஆயிரம் ரூபாயை எடுத்த அந்த பெண் தப்பிச் சென்றுள்ளார்.

பணம் எடுக்கப்பட்ட குறுஞ்செய்தி தனது போனிற்கு வந்ததால் அதிர்ச்சியடைந்த அனு இது குறித்து போலீசில் புகாரளித்துள்ளார். சிசிடிவி காட்சியை கொண்டு விசாரணை நடத்தியதில் அப்பெண் ஏற்கனவே இது போல மூன்று பெண்களை ஏமாற்றி பணம் திருடியுள்ளதாக தெரிய வந்த நிலையில் போலீசார் தற்போது தீவிரமாக அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.

Tags : #ATM #FORGERY