‘வீட்டு வாசலை சீர்செய்தபோது’... ‘இளைஞருக்கு நடந்த விபரீதம்’... 'துக்கத்தை ஏற்படுத்திய சம்பவம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Feb 21, 2020 04:14 PM

வீட்டின் முன்பு இருந்த போர்டிகோவை சீர்செய்தபோது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

young man died after portico collapsed in his house

தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே நத்த அள்ளியை சேர்ந்தவர் காளியப்பன் மகன் சக்திவேல் ( 27). கூலித்தொழிலாளியான இவருடைய வீட்டின் முன்பக்கமுள்ள போர்ட்டிகோவில் விரிசல் ஏற்பட்டு இருந்தது. இதனை சக்திவேல் சரிசெய்து சீரமைக்க எண்ணினார். இதற்காக நேற்று மதியம் சக்திவேல் போர்ட்டிகோவில் இரும்பு கம்பியை பயன்படுத்தி சீரமைத்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அது இடிந்து விழுந்தது.

இதனால் இடிபாடுகளுக்குள் சிக்கி சக்திவேல் பலத்த காயம் அடைந்து கதறித் துடித்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த இளைஞர் சக்திவேலுக்கு மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #YOUTH #DHARMAPURI