‘மகன் புற்றுநோய் சிகிச்சைக்கு பணம் பத்தல’.. ‘எதாவது வேலை வாங்கி தாங்க சார்’.. நம்பிபோன தாய்க்கு நேர்ந்த கொடூரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வேலூரில் மகனின் புற்றுநோய் சிகிச்சைக்கு வந்த பெண்ணை தனியார் விடுதி மேலாளர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அருணாசலப் பிரதேசம் சியாங் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஐபோம் கம்சிம் (33). இவர் தனது மகனின் புற்றுநோய் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு வந்துள்ளார். அதற்காக காதிதப்பட்டறை அருகே உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் தனது மகனின் மருத்துவச் செலவு அதிகமாவதால், தனக்கு வேலூரில் ஏதேனும் வேலை வாங்கிக்கொடுங்கள் என விடுதி மேலாளரிடம் ஐபோம் வேதனையுடன் கேட்டுள்ளார்.
இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட விடுதி மேலாளர், உதவி செய்வதுபோல் நடித்து விடுதியின் மற்றொரு அறைக்குள் பூட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அப்பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்தாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அங்கிருந்து தப்பி வந்த ஐபோம் காவல் நிலையத்தில் இதுகுறித்து தெரிவித்துள்ளார். உடனே விடுதிக்கு விரைந்த சென்ற போலீசார் மேலாளரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
