‘மாநில’ அளவிலான போட்டிக்குச் சென்றபோது... 19 வயது ‘குத்துச்சண்டை’ வீரருக்கு நேர்ந்த ‘துயரம்’... ‘அதிர்ச்சி’ சம்பவம்...
முகப்பு > செய்திகள் > இந்தியாவிளையாட்டு விடுதி அறையில் குத்துச்சண்டை வீரர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாக்பூரை சேர்ந்தவர் பிரனவ் ராவத் (19). குத்துச்சண்டை வீரரான பிரனவ் கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் மகாராஷ்டிர மாநிலம் சார்பில் கலந்துகொண்டுள்ளார். இதையடுத்து மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில் நேற்று நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பதற்காக சில நாட்களுக்கு முன்பே அங்கு சென்ற பிரனவ் விளையாட்டு அகாடமி விடுதியில் தங்கியிருந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் உடல் நலக் குறைவால் பிரனவ் பயிற்சிக்கு வராமல் இருந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து நேற்று காலை விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் சடலமாக இருந்துள்ளார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு இதுகுறித்து தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவருடைய உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் பிரனவ் தற்கொலை செய்து கொண்டதை மாநில விளையாட்டுத்துறை மந்திரி சுனில் கேதார் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தற்கொலைக்கான காரணம் பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.
