‘இப்படி எல்லாம் கூடவா பண்ணுவாங்க..?’ அரசு மருத்துவமனையில் நடந்த அவலம்..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Jul 04, 2019 05:00 PM

அரசு மருத்துவமனையில் போதிய ஸ்ட்ரெட்சர்கள் இல்லாததால் ஆண் நோயாளியையும், பெண் நோயாளியையும் ஒரே ஸ்ட்ரெட்சரில் வைத்து அழைத்துச் சென்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Man Woman forced to share stretcher in MP Govt Hospital

இந்தூரில் உள்ள மஹாராஜா யஷ்வந்த் ராவ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சங்கீதா என்பவர் கணவருடன் வந்துள்ளார். அவருக்கு காலில் ஏற்பட்டிருந்த எலும்பு முறிவுக்காக எக்ஸ்ரே எடுக்க அழைத்துச் செல்லப்பட்ட போது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றிப் பேசியுள்ள அவருடைய கணவர், “சிகிச்சை பெற்றாக வேண்டுமே என வேறு வழியின்றி பொறுத்துக் கொண்டோம்” எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்த வீடியோக்கள் வெளியாகி வைரலான நிலையில், மருத்துவமனையின் கண்காணிப்பாளர், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நிதி ஆயோக் வெளியிட்ட  சுகாதாரத்துறைப் பட்டியலில் 18வது இடத்தைப் பிடித்துப் பின்தங்கியுள்ளது மத்திய பிரதேசம். இதற்கு முன்னரே இங்கு ஸ்ட்ரெட்சர் இல்லாமல் நோயாளியை போர்வையில் வைத்து இழுத்துச் சென்றது, உயிருடன் இருக்கும்போதே இறந்துவிட்டதாகக் கூறி நோயாளியை ஒரு நாள் முழுக்கப் பிணவறையில் வைத்திருந்தது எனப் பல சம்பவங்கள் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #MADHYAPRADESH #GOVERNMENT #HOSPITAL #SHOCKING