‘வயிற்றிலிருந்த பொருட்களைப் பார்த்து அதிர்ந்த டாக்டர்கள்..’ மனநலம் பாதித்தவருக்கு நடந்த பரிதாபம்..
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Jun 18, 2019 04:24 PM
ராஜஸ்தான் மாநிலத்தில் கடும் வயிற்றுவலியால் மருத்துவமனைக்கு வந்தவரின் வயிற்றில் இருந்த பொருட்களைப் பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உதய்பூரைச் சேர்ந்த மனநலம் பாதித்த ஒருவருக்கு கடும் வயிற்றுவலி இருந்து வந்துள்ளது. இதற்காக அவரைக் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது வயிற்றுப்பகுதியை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவரது வயிற்றில் இரும்பு ஆணிகள், சாவிகள், நாணயங்கள் மற்றும் துருப்பிடித்த செயின்கள் என 800 கிராம் எடையிலான பொருட்கள் இருந்ததுள்ளது.
உடனடியாக 4 பேர் கொண்ட மருத்துவர் குழு அவருக்கு அறுவை சிகிச்சை செய்து வயிற்றிலிருந்த இரும்புப் பொருட்களை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். இதைப்போலவே சமீபத்தில் மனநலம் பாதித்த நோயாளி ஒருவரின் வயிற்றிலிருந்து 116 ஆணிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Rajasthan: Doctors remove more than 80 items including keys, coins & 'chillam' among other items from a patient's stomach in Udaipur. pic.twitter.com/zrT4iHcvu0
— ANI (@ANI) June 17, 2019
