'கருக்கலைப்புக்கு போனா இப்படியா பண்ணுவீங்க'... 'மருத்துவர்களின் செயலால்' ... 'அதிர்ந்த பெண்' !

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jun 24, 2019 12:24 PM

கருக்கலைப்பிற்காக சென்ற பெண்ணிற்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Family Planning done for the woman who wanted abortion in Virudhunagar

மதுரை மாவட்டம் மருதங்குடியை சேர்ந்த பெண்ணிற்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளது. இதற்கிடையே அவர் மீண்டும் கற்பமானதால் கருக்கலைப்பு செய்வதற்காக கடந்த 12-ம் தேதி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் அவருக்கு கருக்கலைப்பு செய்யாமல் குடும்பக்கட்டுப்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து வீடு திரும்பிய அந்த பெண்ணிற்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது.உடனே அந்த பெண் தனியார் ஸ்கேன் மையத்திற்கு சென்று பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவரது கரு கலைக்கப்படாதது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மீண்டும் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.இதையடுத்து மருத்துவர்கள், கருக்கலைப்பு செய்வதாக கூறி அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். ஆனால் அவர் சிகிச்சைக்கு பயந்து இரவோடு இரவாக மருத்துவமனையில் இருந்து தப்பியோடியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள், அந்த பெண்ணை தொடர்பு கொண்டு சிகிச்சைக்கு வருமாறு அழைத்துள்ளார்கள். ஆனால் மருத்துவமனைக்கு வர அவர் மறுத்துவிட்டதால், அப்பெண்ணை அழைத்து வர ஆம்புலன்ஸுடன் செவிலியர் ஒருவரும் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் நான் அங்கு சிகிச்சைக்கு வரமாட்டேன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொள்கிறேன் என அந்த பெண் உறுதியாக தெரிவித்து விட்டார்.இந்த சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #HOSPITAL #FAMILY PLANNING #ABORTION #VIRUDHUNAGAR