‘கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தில் சிக்கிய நபர்’.. அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ காட்சிகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jul 03, 2019 04:26 PM

மத்தியப் பிரதேசத்தில் இருசக்கர வாகனத்தில் ஆற்றைக் கடக்க முயன்ற நபர் வெள்ளத்தில் இழுந்து செல்லப்பட்ட வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

WATCH: Biker was swept away while crossing a flooded road in Khargone

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல அணைகள் நிரம்பி வழிய ஆரம்பித்துள்ளன. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேலும் தொடர் கனமழையின் காரணமாக பலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஹார்கோன் நகரத்தில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. அதில், ஹார்கோன் நகரில் உள்ள பகுதி ஒன்றில் நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அதிர்ஷ்டவசமாக அருகில் இருந்த ஊர்மக்கள் அவரை வெள்ளத்தில் இருந்து மீட்டு காப்பாற்றியுள்ளனர்.

Tags : #KHARGONE #FLOOD #MADHYAPRADESH