'ராஜீவ்காந்தி மருத்துவமனை'க்கு வந்த சோதனை'... இப்படி கூட நடக்குமா?.... 'அதிர்ச்சியில் நோயாளிகள்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jun 19, 2019 10:23 AM

சென்னையில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை,மக்களின் அன்றாட வாழ்வினை கேள்வி குறியாக்கியுள்ளது. அதன் தாக்கம் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையையும் விட்டு வைக்கவில்லை.

Chennai Rajiv Gandhi Hospital toilet closed for water crisis

சென்னையின் மிக முக்கியமான மருத்துவமனைகளில் ஒன்று ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை.இங்கு பல்வேறு சிறப்பு பிரிவுகள் இயங்கி வருகிறது.இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக தமிழகம் மட்டுமல்லாது,அண்டை மாநிலங்களில் இருந்தும் பல பேர் தினமும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இதனால் எப்போதும் பரபரப்புடன் காணப்படும் இந்த மருத்துவமனையில்,தற்போது தண்ணீர் தட்டுப்பாடு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

இதன் காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் பல கழிப்பறைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.அதோடு நோயாளிகளோடு வரும் அவரது உறவினர்களும்,தங்களது இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் அவதி பட்டு வருகிறார்கள்.ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்னை குடிநீர் வாரிய லாரிகள் மூலம் தண்ணீர் பெறப்படுகிறது. இருப்பினும் மருத்துமனைக்கு தேவையான தண்ணீரின் அளவை பூர்த்தி செய்ய இயலவில்லை.

இதனால் மருத்துவமனையின் டவர் 1 மற்றும் டவர் 2 ஆகிய அடுக்குமாடி கட்டடங்களின் தரைத்தளத்தில் உள்ள கழிவறைகள் பெரும்பாலும் மூடப்பட்டு கிடக்கின்றன. தலைநகரின் முக்கிய மருத்துவமனைக்கு ஏற்பட்டிருக்கும் இந்த சிக்கலை,அரசு உடனடியாக தலையிட்டு நிவர்த்தி செய்ய வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.இதனிடையே தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக மருத்துவமனை கழிப்பறைகள் மூடப்பட்டுள்ள சம்பவம் நோயாளிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #HOSPITAL #CHENNAI WATER CRISIS #RAJIV GANDHI HOSPITAL