‘தாயின் செயலால் அதிர்ந்துபோய் நின்ற மகள்..’ கண்முன்னே தந்தைக்கு நடந்த பயங்கரம்..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Jun 22, 2019 08:46 PM

விவாகரத்து கேட்ட கணவனை மகளின் கண்முன்னே கத்தியால் குத்தி மனைவி கொலை செய்த சம்பவம் சிங்கப்பூரில் நடந்துள்ளது.

Woman killed husband in front of teen daughter in Singapore

சிங்கப்பூரில் மகளுடன் வசித்து வந்த கணவன், மனைவி இருவருக்கும் இடையே கணவரின் வேலைப்பளு காரணமாக அடிக்கடி பிரச்சனை இருந்து வந்துள்ளது. மனைவியிடம் தினமும் வேலை குறித்து விளக்க முடியாமல் ஒரு கட்டத்தில் விவாகரத்து முடிவுக்கு வந்துள்ளார் கணவர். அவருடன் பணியாற்றும் சக ஊழியரிடம், ‘விவாகரத்து செய்துவிட்டு கனடா சென்று செட்டிலாகப் போகிறேன்’ எனவும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி கணவரைக் கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்.

சம்பவத்தன்று அதிகாலை 5 மணியளவில் பெற்றோர் அறையிலிருந்து அப்பாவின் அலறல் சத்தம் கேட்டு அவர்களது மகள் ஓடிச்சென்று பார்த்துள்ளார். ‘என்னிடம் ஏன் பொய் சொன்னாய்’ எனக் கேட்டுக் கொண்டே இரண்டு கைகளிலும் கத்தியை வைத்துக் கொண்டு நின்ற தாயைப் பார்த்து மகள் அதிர்ந்து போயுள்ளார். கணவரைக் கத்தியால் குத்திவிட்டு தன் கையையும் அறுத்துக் கொண்டுள்ளார்.

மகள் அளித்த தகவலால் அங்கு வந்த போலீஸார் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். இதில் சிகிச்சை பலனின்றி கணவர் இறந்துள்ளார். இறுதியாக அந்தப் பெண் தோழி ஒருவருக்கு, “என் மகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்” என மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவரது மகள், “சம்பவத்தன்று என்ன நடந்தது எனத் தெரியவில்லை. ஆனால் என் அம்மா அப்பாவின்மீது அதீத அன்பு வைத்திருந்தார்” எனக் கூறியுள்ளார்.

Tags : #FAMILY #SHOCKING