கர்ப்பிணிப் பெண்ணை சுட்டுக் கொன்ற சொந்த சகோதர்கள்..! போலிஸாரிடம் அளித்த பகீர் வாக்குமூலம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jun 24, 2019 11:06 AM

கர்ப்பிணிப் பெண்ணை அவரது சொந்த சகோதரரே துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Pregnant woman was shot dead allegedly by her teenage brothers

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ராவாத் என்னும் கிராமத்தில் குல்தீப் ராஜ்வத் என்ற இளைஞரும், அதே கிராமத்தை சேர்ந்த புல்புல் என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இதற்கு பெண் வீட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனால் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு குல்தீப் மற்றும் புல்புல் ஆகிய இருவரும் கிராமத்தைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் புல்புல் கர்ப்பமாகியதை அடுத்து, குல்தீப்பின் வீட்டார் மனமிறங்கி, இருவரையும் வீட்டிற்கு அழைத்துள்ளனர். இதனால் இருவரும் அவர்களது சொந்த கிராமத்துக்கு சென்றுள்ளனர்.

இதனை அடுத்து குல்தீப்பின் வீட்டிற்கு வந்த புல்புல்லின் சகோதரர்களான கார்த்திக் மற்றும் சுப்மன் ஆகிய இருவரும், கர்ப்பிணி என்றும் பாராமல் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் புல்புல் துடிதுடிக்க கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அப்போது குல்தீப் வீட்டில் இல்லாததால் அவரது தாயார் பதறி அருகிலிருந்தவர்களை அழைத்துள்ளார். அதற்குள் புல்புல்லின் சகோதர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனை அடுத்து காவல் நிலையத்தில் சரணடைந்த இருவரும், ‘தங்களது சகோதரி வேறொரு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்ததால், தங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் எங்களுடைய குடும்பத்தை ஏளனமாக பார்த்தனர். அந்த வெறுப்பில்தான் சகோதரியை சுட்டுக் கொன்றோம்’ என வாக்குமூலம் அளித்ததாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தர்மராஜ் மீனா தெரிவித்துள்ளார்.

Tags : #PREGNANT #WOMAN #MADHYAPRADESH